திருமண வாழ்த்து ஓர் விளக்கம்

கோட்டகுப்பதில் நடந்த நபி வழி திருமணம்

கோட்டகுப்பதில் நடந்த நபி வழி திருமணம் - போலீஸ்  குவிப்பு
ஓர் நேரடி ரிப்போர்ட்

செய்திகள் தருபவர்கள்: வளைகுடா வாழ் கோட்டகுப்பம் சகோதரர்கள


19/09/2010  ஞாயிற்றுகிழமை  அன்று கோட்டக்குப்பத்தில் சகோதரர்கள் A .S . அப்துல் வதூத் - M . I . ஜலாலுதீன் இல்லத்திருமணம் காவல் துறையின் பாதுகாப்புடன் பரபரப்பான சூழ்நிலையில் நடைப்பெற்றது. இந்த பரபரப்பு பற்றி ஓர் நேரடி ரிப்போர்ட்.

மணமகனின் தந்தையார் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தமது மகனின் திருமணம் நபி வழியில் நடை பெற வேண்டும் என்றும் கடைசியாக ஓதும் அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா... என்ற துஆ நபிவழிக்கு புறம்பானது என்றும் வலியுறுத்தி இந்த துஆவை ஓதக்கூடாது என்றும் கூறினார். ஆனால் பள்ளிவாசல் நிர்வாகிகள் காலங்காலமாக ஓதி வரும் இந்த துஆவை நாங்கள் ஓதி தான் திருமணம் செய்விப்போம் என்று பிடிவாதம் பிடித்தனர்.

(பார்க்க திருமண வாழ்த்து ஓர் விளக்கம்)

மணமகனின் தந்தை தங்கள் பிள்ளைகளை வாழ்த்த இந்த துஆ தேவையற்றது என்று வலியுறுத்தி வந்து விட்டனர். பள்ளி நிர்வாகிகள் பெரும்பானோர் இந்த கருத்தை ஆதரித்தாலும்  கல்வியறிவற்ற சில ஆதிக்க மனப்பான்மை உள்ள நிர்வாகிகள் இதை முழுமையாக எதிர்த்தார்கள்.

இந்த திருமணத்தை சீர்குலைக்க நிர்வாகத்தை பயன்படுத்தி சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் இந்த திருமணத்தில் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று நோடீஸ் போட்டனர். ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகையும் வைத்தனர். திருமணத்தன்று  பள்ளிவாசல் இமாம்களை ஏவி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்தனர்.  வீடு வீடாக சென்று அச்சுறுத்தலுடன் கூடிய கட்டளையும் பிறபித்தனர்.

இதனால் ஊரில் பரபரப்பு ஏற்பட்டு மணமக்களின் பெற்றோர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமணப்பதிவு புத்தகத்தில் திருமணத்தை பதிவு செய்து நபி வழியில் திருமணத்தை நடத்தினர்.  பதற்றத்தை தவிர்க்க 2 சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 35 போலீசார் சம்பவ இடத்தில குவிக்கப்பட்டனர். சுமார் 1500 நபர்கள் ஆண்களும் பெண்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர். பத்திரிக்கைகளிலும்,கேப்டன்டிவி, புதுச்சேரிடிவி சேனல் அனைத்திலும் தலைப்புசெய்தியாக இந்த சம்பவத்தை வெளியிட்டனர்.  பள்ளி நிர்வாகிகளின் சூழ்ச்சிக்கு எதிராக அல்லாஹ் சூழ்ச்சி செய்து விட்டான். எல்லாம் புகழும் இறைவனுக்கே!